

அமெரிக்காவில் இந்திய மாணவர் அபிஷேக்கை சுட்டுக் கொன்ற நபர் சரணடைந்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்தவர் அபிஷேக். பிரபல எழுத்தாளர் கே.சிவராமன் அய்தாலின் பேரன். அபிஷேக், அமெரிக்காவில் கணினி அறிவியல் பயின்று வந்தார். 2016-ல் இந்தியாவில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்ற அவர் மேற்படிப்பை அமெரிக்காவில் தொடர்ந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவில் மேற்படிப்பு பயின்று வந்த அபிஷேக், சான் பெர்னார்டியோவில் ஒரு ஹோட்டலில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான் பெர்னார்டியோ நகரில் வியாழக்கிழமையன்று இச்சம்பவம் நடந்துள்ளது.
இந்திய மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அபிஷேக்கை சுட்டுக் கொன்ற நபர், சார் பெர்னர்டினோ நகர் போலீஸாரிடம் சரணடைந்துள்ளார்.
இதகுறித்து போலீஸார் தரப்பில், ”அபிஷேக்கை சுட்டுக் கொன்ற எரிக் டர்னர் (42) என்பவர் சரணடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.