Published : 30 Nov 2019 06:35 PM
Last Updated : 30 Nov 2019 06:35 PM

லண்டனில் கத்தி குத்து தாக்குதல் நடத்தியவர் பாக். தீவிரவாத அமைப்புகளிடமிருந்து நிதி பெற்றவர்

பிரிட்டன் தலைநகர் லண்டனில் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியவர் பாகிஸ்தான் தீவிரவாத முகாமிடமிருந்து நிதியுதவி பெற்று வந்தவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் சரமாரியாக அவர் கத்தியால் குத்தியதில் இருவர் உயிரிழந்தனர்.

மர்ம நபர் கத்தியால் தாக்கியதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய மர்ம நபரை பாலத்தின் அருகே துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடித்தனர். இதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தாக்குதல் நடத்தியவர் பெயர் உஸ்மான் கான் (28) என்றும், அவர் தனது இளமை காலத்தை பாகிஸ்தானில் செலவழித்திருக்கிறார் பின்னர் லண்டன் வந்திருக்கிறார் என்றும் லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் தீவிரவாத கருத்துகளை இணையத்தில் பரப்புவதற்காக பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளிடமிருந்து நிதி பெற்று வந்திருக்கிறார் உஸ்மான் என்றும் அவர் அல்கய்தா தீவிரவாத கொள்கை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டிருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x