

பாகிஸ்தானில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், ”பாகிஸ்தானின் லாகூரில் உள்ள சாபர்கி பகுதிகள் இன்று (வெள்ளிக்கிழமை) ரிக்ஷா சைக்கிள் அருகே சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.
சிலிண்டர் வெடி விபத்து ஏற்பட்ட பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவினர் விரைந்துள்ளதாகவும், தொடர்ந்து அங்கு விசாரணை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிலிண்டர் வெடிப்பில் தீவிரவாத சதிச் செயல் உள்ளதா என அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானின் கடன் சுமை 6 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 30 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக இம்ரான் கான் அரசை எதிர்த்து எதிர்க்கட்சிகளுக்கும், பொது மக்களும் கடந்த சில மாதங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நாட்டில் அவ்வப்போது ஆங்காங்கே நாச செயல்கள் நடந்து வருகிறன.