Published : 29 Nov 2019 03:12 PM
Last Updated : 29 Nov 2019 03:12 PM

ஜப்பான் முன்னாள் பிரதமர் 101 வயதில் மரணம்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் யாசுஹிரோ நகசோனி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 101

இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், “1982 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை ஜனநாயக கட்சியின் தலைவராகவும், ஜப்பானில் பிரதமராக இருந்த யாசுஹிரோ நாகசோனி முதுமை காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 101” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாசுஹிரோ நாகசோனி ஆட்சிக் காலத்தில் அப்போது அமெரிக்காவின் அதிபராக இருந்த ரொனால்ட் ரீகனுடன் அனைவராலும் பாராட்டக் கூடிய கூடிய வகையில் நட்புறவில் இருந்தார். அவர்களுடைய நட்பு இன்னும் ஜப்பானியர்களால் நினைவுக்கூறப்படுகிறது.

ரீகனுடன் யாசுஹிர்

ஜப்பானில் நீண்ட நாள் வாழ்ந்த முன்னாள் பிரதமர், யாசுஹிரோ நகசோனி என்று ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யாசுஹிரோ ஜப்பானின் டகாசாகி மாவட்டத்தில் மே 27 ஆம் தேதி 1918 ஆம் ஆண்டு பிறந்தார். டோக்கியோ பல்கலைகழகத்தில் தனது முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். தனது இளைய சகோதரை இரண்டாம் உலக போரின்போது பறிக் கொடுத்தார் யாசுஹிரோ.

1983 ஆம் ஆண்டு தென் கொரியாவுக்கு பயணம் செய்ததன் மூலம் அந்நாட்டு முதல் பயணம் மேற்கொண்ட ஜப்பான் பிரதமர் என்ற சிறப்பு யாசுஹிரோவுக்கு கிடைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x