வடக்கு மாகாண ஆளுநராகிறார் முரளிதரன்

வடக்கு மாகாண ஆளுநராகிறார் முரளிதரன்
Updated on
1 min read

இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான திகழ்ந்தவர் முத்தையா முரளிதரன். தமிழரான இவர், சென்னையைச் சேர்ந்த மதிமலர் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகா ணத்தின் ஆளுநராக முத்தையா முரளிதரனை நியமிக்க, இலங்கை அதிபர் கோத்தபய ராஜ பக்ச முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

இதையடுத்து முரளிதரனை அழைத்து ஆளுநர் பதவியை ஏற்குமாறு அதிபர் கோத்தபய ராஜபக்ச கூறியதாக அங்கிருந்து வெளியாகும் டெய்லி மிர்ரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்துக்கு அனுராதா யஹம்பத், வட மத்திய மாகாணத்துக்கு திஸ்ஸா விதரனா நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in