சிரியாவில் துருக்கி கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளூர்வாசிகளுக்கு ஆபத்தானது

சிரியாவில் துருக்கி கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளூர்வாசிகளுக்கு ஆபத்தானது
Updated on
1 min read

சிரியாவில் துருக்கி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் உள்ளூர்வாசிகளுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்று மனித உரிமை தன்னார்வ அமைப்பான ’watchdog’ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நியூயார்க்கில் இயங்கும் தன்னார்வ மனித உரிமை அமைப்பான watchdog கூறும்போது, “துருக்கி மற்றும் சிரிய குர்துப் படையினர் சிரியாவின் வடக்குப் பகுதியில் நடத்தும் தாக்குதல்கள், அப்பகுதிகளில் வசிக்கும் உள்ளூர்வாசிகளுக்கு எதிரான போர்க் குற்றங்களே. எனவே அப்பகுதிகள் உள்ளூர்வாசிகளுக்குப் பாதுகாப்பானதாக இல்லை” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் தங்கள் படைகளைத் திரும்பப் பெற்றனர். சிரியாவில் துருக்கிப் படையினர் குர்து படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தினர்.

துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி ராணுவம் குர்து படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in