Last Updated : 28 Nov, 2019 05:36 PM

 

Published : 28 Nov 2019 05:36 PM
Last Updated : 28 Nov 2019 05:36 PM

ஆசியாவின் டாப் 10 பல்கலைக்கழகங்கள்: 7 இடங்களைப் பிடித்த சீனா

ஆசியாவின் சிறந்த பல்கலைக்கத்திற்கான முதல் இடத்தைப் பிடித்த சீனாவின் பீகிங் பல்கலைக்கழகம்

லண்டனைத் தலைமையகமாகக் கொண்ட உயர் கல்வி ஆய்வு நிறுவனம் ஒன்று ஆசியாவின் 500 சிறந்த பல்கலைக்கழகங்கள் குறித்து வெளியிட்டுள்ள பட்டியலில் டாப் 10 இடங்களில் 7 சீனப் பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன.

லண்டனைத் தளமாகக் கொண்ட உயர் கல்வி ஆய்வு நிறுவனமான 'கியூஎஸ் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்' ஆசியாவின் 500 சிறந்த பல்கலைக்கழகங்களின் சமீபத்திய மதிப்பீட்டை புதன்கிழமை வெளியிட்டது. தர வரிசையில் முதல் 10 இடங்களில் சீனாவைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களே 7 இடங்களைப் பிடித்ததாக சினுவா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

முதல் 10 ஆசிய பல்கலைக்கழகங்களாக, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஹாங்காங் பல்கலைக்கழகம், சிங்குவா பல்கலைக்கழகம், பீக்கிங் பல்கலைக்கழகம், ஜெஜியாங் பல்கலைக்கழகம், ஃபுடான் பல்கலைக்கழகம், ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கொரியா மேம்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஹாங்காங்கின் சீன பல்கலைக்கழகம் ஆகியவை லண்டனை தளமாகக் கொண்ட உயர்கல்வி ஆய்வாளர் நிறுவனமான கியூஎஸ் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் வரிசைப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கியூஎஸ் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் கிறிஸ்டினா யான் ஜாங் கூறியதாவது:

''70 ஆண்டுகளுக்கு முன்பு புதிய சீனா நிறுவப்பட்டதிலிருந்து, சீனா தனது உயர் கல்வியை நவீன மயமாக்குவதில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. சீனாவின் சில அதிநவீன ஆராய்ச்சிப் பகுதிகள் உலகளாவிய முன்னணி பதவிகளைப் பெறத் தொடங்கியுள்ளன,

மதிப்பிடப்பட்ட முதல் 500 நிறுவனங்களில், சீனாவில் அதிக எண்ணிக்கையில் உள்ளது, மொத்தம் 165 (சீன நாட்டில் இருந்து 118). இந்தியா 101, ஜப்பான் 87, தென் கொரியா 71 ஆகும்.

94,672 முன்னணி கல்வியாளர்களின் உலகளாவிய கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் சீன நாட்டின் 10 பல்கலைக்கழகங்கள் சிறப்பாக கல்வி பயிற்றுவிக்கும் அதன் நற்பெயருக்காக முதல் 50 இடங்களில் உள்ளன. அதே நேரத்தில் ஆறு பிரதான பல்கலைக்கழகங்கள் முதல் 50 இடங்களைப் பெறுகின்றன.

கியூஎஸ் ஆய்வின் படி, 44,884 தேர்வாளர்களின் உலகளாவிய கணக்கெடுப்பின் அடிப்படையில் நிறுவன முதலாளிகளின் நற்பெயர் அடிப்படையில், பீக்கிங் பல்கலைக்கழகம் முதல் இடத்தையும், சிங்குவா பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்தன''.

இவ்வாறு டாக்டர் கிறிஸ்டினா யான் ஜாங் தெரிவித்தார்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது எவ்வகையில் ஆராய்ச்சி மேற்கொண்டாலும் சீன நாட்டில் உள்ள பிரதான கல்வி நிறுவனங்கள் உண்மையில் பிரகாசிக்கின்றன. சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுத்தாள்களில் முதல் 50 இடங்களில் 25 உள்ளன. இது தயாரிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் செல்வாக்கை அளவிடும் ஒரு கருவியாகும் என்று கியூஎஸ் கூறியது.

2004 முதல் கியூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசைகளைத் தொகுத்து வெளியிட்டு வருகிறது. அப்போதிருந்து, தரவரிசை பல்கலைக்கழக செயல் திறனைப் பற்றிய ஒப்பீட்டுத் தரவின் உலகின் மிகவும் பிரபலமான ஆதாரங்களில் ஒன்றாக இந்நிறுவனம் வளர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x