

கடந்த 1984-ம் ஆண்டு அப்போ தைய பிரதமர் இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்களே சுட்டுக் கொன்றனர். இதையடுத்து சீக்கியர்கள் மீது கடும் தாக்குதல் நடந்தது. டெல்லியில் பலர் கொல்லப்பட்டனர். சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், கலவரத்தில் தொடர்புடைய கட்சித் தலைவர் களை, தற்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாது காக்கிறார். கலவரத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரி நியூயார்க் புரூக்ளின் நீதிமன்றத்தில் 'சீக்கியர் களுக்கான நீதி' என்ற மனித உரிமை அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, நியூயார்க்கின் மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் சீக்கியர் அமைப்பு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் கேப்ரேன்ஸ், ரீனா ரெகி, ரிச்சர்டு வெஸ்லே ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
அப்போது மனுதாரர்கள் மற்றும் சோனியா தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினர். இதையடுத்து, சோனியாவுக்கு எதிரான மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை உறுதி செய்வதா அல்லது அவருக்கு எதிரான வழக்கை தொடர்ந்து விசாரணைக்கு ஏற்பதா என்பது குறித்த முடிவை நீதிபதிகள் நிறுத்தி வைத்தனர்.