இலங்கையில் கோத்தபய ராஜபக்ச முன்னிலையில் 35 அமைச்சர்கள் பதவியேற்பு

இலங்கையில் கோத்தபய ராஜபக்ச முன்னிலையில் 35 அமைச்சர்கள் பதவியேற்பு
Updated on
1 min read

சமல் ராஜபக்ச உட்பட 35 பேர் அமைச்சர்களாக இலங்கையில் பதவியேற்றுக் கொண்டனர்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

பதவியேற்பு விழாவில் கோத்தபய ராஜபக்சவின் சகோதரர் சமல் ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். பாதுகாப்பு அமைச்சகத்துடன் விவசாயம், உள்துறை வர்த்தகம் போன்ற துறைகள் சமல் ராஜபக்சவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பதவியேற்பு விழாவில் இந்திகா அனுராதா மற்றும் நிமல் லன்சா ஆகியோர் துணை அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். கடந்த வாரம் 16 பேர் கோத்தபய ராஜபக்ச முன்னிலையில் இடைக்கால அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

சமீபத்தில் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் சுமார் 54 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்று பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார். சுமார் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவை வெற்றி கொண்டார் கோத்தபய ராஜபக்ச.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், கோத்தபய ராஜபக்ச வரும் 29 ஆம் தேதி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in