ஆரோக்கியம் காட்டும் ‘ஸ்மார்ட் ’ கண்ணாடி

ஆரோக்கியம் காட்டும் ‘ஸ்மார்ட் ’ கண்ணாடி
Updated on
1 min read

மனிதர்களின் முகம் மற்றும் மூச்சு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை வைத்து அவர்களுக்குப் பிற்காலத்தில் வரும் நோய்கள் குறித்து முன்னரே எச்சரிக்கை செய்யும் 'ஸ்மார்ட்' கண்ணாடி ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகிறார்கள்.

'வைஸ் மிரர்' என்று பெயரிடப் பட்டிருக்கும் இந்தக் கண்ணாடியில் பல சென்சார்கள் உள்ளன. தவிர, ஐந்து கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. அதன் மூலம் குறிப் பிட்ட ஒளிக்கற்றைகள் உள்ளிழுக் கப்பட்டு 3டி ஸ்கேனருக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் சில மென்பொருட்களின் உதவியுடன் முகத்தில் இருக்கும் திசுக்களில் உள்ள கொழுப்பு மற்றும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை ஆகியவை ஆராயப்படும்.

இதிலேயே காற்றை உள்ளி ழுக்கும் சிறு குழாய் ஒன்றும் பதிக்கப் பட்டுள்ளது. அது மனிதர் விடும் மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு அதில் உள்ள வேதிப் பொருட்களை ஆராயும்.

இந்தக் கண்ணாடி முன் நபர் ஒருவர் வந்து நிற்கும்போது, அவரின் முகம் மற்றும் மூச்சு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை வைத்து அவருக்குப் பிற்காலத்தில் நீரிழிவு, மாரடைப்பு அல்லது இதர இதய நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருந்தால், அவற்றைக் குறித்து தெரிவிக்கும். வாழ்க்கைமுறையில் என்னென்ன மாற்றங்களைக் கைக்கொள்ள வேண்டும் என்ப தையும் தெரிவிக்கும் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in