Published : 23 Nov 2019 15:43 pm

Updated : 23 Nov 2019 15:44 pm

 

Published : 23 Nov 2019 03:43 PM
Last Updated : 23 Nov 2019 03:44 PM

ஆப்கனில் இரு இடங்களில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி

2-explosions-rock-afghanistan-3-killed

ஆப்கானிஸ்தானில் நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் 3 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஆப்கன் அதிகாரிகள் தரப்பில், ''ஆப்கானிஸ்தானில் காபிசா மாகாணத்தில் அலாசாய் மாவட்டத்தில் உள்ள சந்தைப் பகுதிகளில் குண்டு வெடித்ததில் 3 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். மேலும் காபூலில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்பில் வாகனத்தில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் போலீஸார் சிலர் காயமடைந்தனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்தத் தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இந்தத் தாக்ககுதலை தலிபான்கள் அல்லது ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்தி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில் தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்கா தலைமையில் நடந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், ஆப்கனில் தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முயற்சியால் 2016 ஆம் ஆண்டு தலிபான்களால் சிறை பிடிக்கப்பட்ட இரண்டு அமெரிக்கப் பேராசிரியர்கள் விடுவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து மீண்டும் தலிபான்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.


ஆப்கானிஸ்தான்குண்டுவெடிப்பு3 பேர் பலிதலிபான்கள்அமெரிக்காட்ரம்ப்

You May Like

More From This Category

More From this Author