Published : 17 Nov 2019 09:35 AM
Last Updated : 17 Nov 2019 09:35 AM

இலங்கை அதிபர் தேர்தல்: சஜித் பிரேமதாசா, கோத்தபய ராஜபக்ச மாறி மாறி முன்னிலை

இலங்கையின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் ராஜபக்சவும் , சஜித் பிரேமதாசாவும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றனர்.

அண்டை நாடான இலங்கையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில், 35 பேர் போட்டியிட்டாலும், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபயா ராஜபக்சே, 70, ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் பிரேமதாசா, 52, ஆகியோருக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போதைய அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. காலை, 7:00 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கியது.

புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளரான சஜித் பிரேமதாச 45.92 சதவீதம் ஓட்டுகள் பெற்று பின்னடைவில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய 47.34 சவீதம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
காலை 8.30 மணி நிலவரப்படி, சஜித் பிரேமதாச 12,01,896 ஓட்டுகளும், கோத்தபய ராஜபக்சே 12,39,181 ஓட்டுகளும் பெற்றுள்ளனர். தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணம் பகுதியில் சஜித் பிரேமதாசவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளன.

சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ள தொகுதிகள்யாழ்ப்பாணம், திருகோணமலை, திகாமடுல்லை, காலி, மற்றும் வன்னி ஆகியவையாகும்

கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் உள்ள தொகுதிகள் மொனராகலை, கம்பகா, ரத்தினகிரி, மாத்தளை, கொழும்பு, நுவரெலியா, பதுள்ளை, களுத்துறை, பொலன்னறுவை, மற்றும் அப்பாந்தோட்டை ஆகியவையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x