Published : 17 Nov 2019 09:29 AM
Last Updated : 17 Nov 2019 09:29 AM

நானும் காஷ்மீரைச் சேர்ந்தவள்தான்; 30 ஆண்டுக்கு முன்பே பாதிக்கப்பட்டோம்: அமெரிக்காவில் இந்திய பத்திரிகையாளர் சுனந்தா சாட்சியம்

நானும் காஷ்மீரைச் சேர்ந்தவள் தான் என்றும் தீவிரவாதத்தால் 30 ஆண்டுகளுக்கு முன்பே எனது குடும்பம் பாதிக்கப்பட்டது என்றும் அமெரிக்க மனித உரிமை ஆணை யம் முன்பு இந்திய அமெரிக் கரும் பிரபல பத்திரிகை யாளருமான சுனந்தா வசிஷ்ட் சாட்சியம் அளித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய டாம் லான் டோஸ் மனித உரிமை ஆணையத் தின் கூட்டம் கடந்த 14-ம் தேதி வாஷிங்டனில் நடைபெற்றது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள மனித உரிமை நிலவரம் குறித்து விசாரிக்க இந்தக் கூட்டத் துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், நாடுகடந்து வசிக்கும் காஷ்மீர் மக்கள் சங்கத் தின் (கேஓஏ) தலைவர் ஷகுன் முன்ஷி மற்றும் செயலாளர் அம்ரிதா கவுர் சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு பிரிவினரின் கருத்தை கேட்காதது அதிருப்தி அளிக்கிறது. எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் இந்தியா எதிர்கொண்டு வரும் பாதுகாப்பு சவால்களையும் இந்த ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப் பாக எல்லை தாண்டிய தீவிர வாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்து மாறு பாகிஸ்தானை அறிவுறுத்த வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், காஷ்மீரை பூர் வீகமாக கொண்டவரும் அமெரிக் காவில் வசித்து வரும் பிரபல பத்திரிகையாளருமான சுனந்தா வசிஷ்ட் சாட்சியம் அளித்தார். அப்போது, 1990-களில் காஷ்மீரில் இந்துக்கள் எதிர்கொண்ட பிரச் சினைகள் குறித்து விளக்கினார். அவர் கூறியதாவது:

என்னுடைய தந்தையும் தாயும் நானும் காஷ்மீர் இந்துக்கள். காஷ்மீரில் நாங்கள் வசித்த வீட்டையும் எங்கள் வாழ்வையும் தீவிரவாதம் அழித்துவிட்டது. இத னால் 30 ஆண்டுகளுக்கு முன்பே அங்கிருந்து வெளியேறினோம். என்னுடைய மனித உரிமையும் ஒரு நாள் மீட்கப்படும் என நம்பினேன். (அமெரிக்க பத்திரி கையாளர் டேனியல் பேர்ல், சில ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ் தானில் தீவிரவாதிகளால் கடத்தப் பட்டு கொல்லப்பட்டார். கொல்லப் படுவதற்கு முன்பு அவர், “என் தந்தையும் தாயும் நானும் யூதர் கள்” என்றார். இதை சுட்டிக் காட்டும் வகையில் சுனந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்).

நானும் காஷ்மீரின் சிறுபான்மை இந்து சமுதாயத்தைச் சேர்ந்தவள் தான். 1990-களில் காஷ்மீர் பண்டிட் கள் விரட்டி அடிக்கப்பட்டனர். இதனால் அங்கிருந்து வெளியேறிய லட்சக்கணக்கானோர் இந்தியா வின் பிற பகுதிகளில் அகதிகளாக குடியேறினர். இந்த இன அழிப்பால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தி.

இப்போது மேற்கத்திய நாடுகள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பே, ஐஎஸ் தீவிரவாதத்துக்கு நிகரான தாக்குதல்களை காஷ்மீர் இந்துக்கள் சந்தித்தனர்.

1990-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி இரவு காஷ்மீரில் உள்ள அனைத்து மசூதிகளிலும் இந்து பெண்களுடன் காஷ்மீர் வேண்டும் என்றும் ஆண்கள் வேண்டாம் என்றும் முழக்கமிட்டனர். அப்போது மனித உரிமை ஆர்வலர்கள் எங்கே சென்றார்கள்.

காஷ்மீரில் இந்துக்கள் மட்டு மல்லாது சீக்கியர்கள் மற்றும் கிறிஸ் தவர்கள் உட்பட பிற மதத்தவர் களை அழிக்க தீவிரவாதிகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர்.

காஷ்மீரில் பிற மதத்தவர்கள் இருப்பதை தீவிரவாதிகள் விரும் பவில்லை. மாற்று கருத்து கொண் டவர்களை சகித்துக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை.

காஷ்மீர் மக்கள் வேலைக்குச் சென்று பணம் சம்பாதிப்பதையும் அங்கு இயல்புநிலை திரும்பு வதையும் தீவிரவாதிகள் விரும்ப வில்லை. இதனால் தங்கள் நோக்கம் நிறைவேறாது என கருதுகின்றனர். எனவேதான் ஆப்பிள் தோட்ட உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்களை கொலை செய்கின்றனர்.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து அமலில் இருந்ததால்தான் இது வரை மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வந்தன. அதை ரத்து செய்திருப்பதால் மனித உரிமை மீட்கப்படும். மேலும், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப் பட்டதால், இந்தியாவின் பிறபகுதி குடிமகன்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் காஷ்மீர் மக்களுக்கும் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டம், உலகிலேயே மிகவும் சிறந்ததாகக் கருதப்படும் அமெரிக்க அரசிய லமைப்பு சட்டத்துடன் ஒத்துப் போகிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ் ரத்து செய்யப்பட்டதை ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வரவேற்கின்றனர்.

காஷ்மீர் இந்தியாவின் ஒருங் கிணைந்த பகுதி. காஷ்மீர் இல்லை என்றால் இந்தியா இல்லை. தீவிரவாதத்துக்கு எதிராக போரா டும் இந்தியாவுக்கு சர்வதேச நாடு கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இதன்மூலம் மனித உரிமை மீறல் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x