Last Updated : 15 Nov, 2019 06:24 PM

 

Published : 15 Nov 2019 06:24 PM
Last Updated : 15 Nov 2019 06:24 PM

போஸ்னியாவில் ஆபத்தானதாக மாறிவரும் அகதி முகாம்கள்

நாளுக்கு நாள் போஸ்னியாவில் அகதிகள் வருகை அதிகரித்து வருவதால், அகதி முகாம்கள் போதிய பராமரிப்பின்றி ஆபத்தானதாகவும் மனிதாபிமானமற்ற முறையிலும் சீரழிந்து வருவதாக மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

போரிலும் வறுமையிலும் பாதிக்கப்பட்ட வுஜாக் அகதிகள் மேற்கு ஐரோப்பாவை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் போஸ்னியாவில் வந்து தஞ்சமடைகின்றனர். அவர்கள் போஸ்னியாவின் ஆபத்தான குளிர் மற்றும் கடுமையான சூழ்நிலையில் வாழ்கின்றனர் என்று 'எல்லைகளில்லாத மருத்துவக்குழு' (The Doctors Without Borders group) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து 'எல்லைகளில்லாத மருத்துவக்குழு' என்கிற மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளதாவது:

''தங்கள் சொந்த நாடுகளில் வன்முறை அல்லது வறுமையிலிருந்து தப்பி ஓடும் ஆயிரக்கணக்கான மக்களின் வருகையால் போஸ்னியா நிரம்பி வழிகிறது. புலம் பெயரும் பெரும்பாலோனாரால் குரோஷியாவின் எல்லையாக இருக்கும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினரான இந்த பால்கன் நாட்டின் வடமேற்குப் பகுதிக்கு ஆயிரக்கணக்கானவர்கள் கூட்டம் கூட்டமாக வந்துகொண்டே இருக்கின்றனர்.

வடமேற்கு போஸ்னியாவில் மேம்படுத்தப்பட்ட வுஜாக் அகதிகள் முகாம் குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தைப் பூர்த்தி செய்யாத நிலையில் உள்ளது. இதனால் அங்கு தஞ்சமடைந்தவர்கள் ஆபத்தான குளிரில் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது இப்பகுதி ஒரு ஆபத்தான மற்றும் மனிதாபிமானமற்ற இடமாக மாறியுள்ளது. ஒரே இடத்தில் அகதிகள் குவிவதால் அவர்களைச் சரியாகப் பராமரிக்க முடியாத நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இது எல்லைப் பிராந்தியத்தில் பதட்டங்களுக்கு வழிவகுத்து வருகிறது. நாட்டின் பிற பகுதிகளில் புலம்பெயர்ந்தோர் சுமையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அங்குள்ள உள்ளூர் அதிகாரிகளும் கோரியுள்ளனர்''.

இவ்வாறு 'எல்லைகளில்லாத மருத்துவக்குழு' மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x