Published : 15 Nov 2019 04:42 PM
Last Updated : 15 Nov 2019 04:42 PM

பாகிஸ்தானில் 3,000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு 

பாகிஸ்தானில் 3,000 ஆண்டுகள் பழமையான நகரத்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் இந்து கோயில்களும் கண்டறியப்பட்டுள்ளன.

இதுகுறித்து பிடிஐ வெளியிட்ட செய்தியில், “பாகிஸ்தான் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த தொல்பொருள் வல்லுநர்கள் ஒன்றாக இணைந்து பாகிஸ்தானில் பண்டைய நகரங்கள் குறித்த தொல்பொருள் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். இருதரப்பும் மேற்கொண்ட கூட்டு அகழ்வாராய்ச்சியில் வடமேற்கு பாகிஸ்தானில் 3,000 ஆண்டுகள் பழமையான நகரத்தைக் கண்டறிந்துள்ளனர். கண்டுபிடித்த நகரத்தின் பெயர் பசிரா என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கண்டறியப்பட்ட நகரத்தில் இந்து கோயில்கள், நாணயங்கள், பானைகள் மற்றும் ஆயுதங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கண்டறியப்பட்ட பழமையான நகரத்தில் பேரரசர் அலெக்ஸாண்டர் கி.பி. 326 ஆம் ஆண்டு, தனது படைகளுடன் வந்து எதிரிகளுடன் போரிட்டு 'பசிரா' என்ற கோட்டையை உருவாக்கியதாக அங்கு கிடைத்துள்ள ஆதரங்கள் மூலம் தொல்பொருள் வல்லுநர்கள் நம்புகின்றனர்.

அலெக்ஸாண்டர் வருகைக்கு முன்னர் அந்நகரத்தில் இந்து ஷாகி, புத்த மதத்தினர் வாழ்ந்து வந்ததாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x