பாலஸ்தீன தீவிரவாத அமைப்பின் மீது இஸ்ரேல் புதிய தாக்குதல்

படம் உதவி: ஏஎன்ஐ
படம் உதவி: ஏஎன்ஐ
Updated on
1 min read

போர் நிறுத்தம் இரண்டு நாட்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் மீது புதிய தாக்குதலைத் தொடுத்துள்ளது இஸ்ரேல்.

இஸ்ரேல்- பாலஸ்தீன எல்லைப் புறத்தில் காசா பகுதியில் இரண்டு நாட்களாக இஸ்லாமிக் ஜிகாத் தீவிரவாத அமைப்புக்கும் இஸ்ரேல் படைகளுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இதில் பாலஸ்தீன தீவிரவாதக் குழுவின் முக்கியத் தளபதியான பஹா அபு அல் அட்டா கொல்லப்பட்டார். மேலும், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 34 பாலஸ்தீனர்கள் பலியாகினர்.

தொடர்ந்து காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எகிப்து முயற்சியால் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே இரண்டு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

இந்நிலையில் மீண்டும் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் மீது புதிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, “நாங்கள் தற்போது காசாவில் உள்ள இஸ்லாமிய ஜிகாத் தீவிரவாதிகளின் முகாம்களைத் தாக்கி வருகிறோம். இஸ்ரேலிய பொதுமக்கள் மீது காசாவிலிருந்து கண்மூடித்தனமாக ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக இந்தத் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in