Last Updated : 30 Aug, 2015 12:31 PM

 

Published : 30 Aug 2015 12:31 PM
Last Updated : 30 Aug 2015 12:31 PM

டொமினிக் குடியரசில் எரிகா புயல் தாக்கி 20 பேர் பலி

கிழக்கு கரிபியன் கடல்பகுதியில் அமைந்துள்ள சிறிய தீவு நாடான டொமினிக் குடியரசை நேற்றுமுன்தினம் தாக்கிய எரிகா புயலில் 20 பேர் உயிரிழந்தனர். 31 பேரது நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை

எரிகா புயல் டொமினிக் கடற்பகுதியை கடந்தபோது சற்று வலுவிழந்து விட்டது எனவே உயிரிழப்பும் சேதமும் குறைவாக இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் வீசியபோது கடுமையான மழை பெய்தது. இதனால் கடல் பெரும் கொந்தளிப்புடன் காணப் பட்டது. பல்வேறு இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல வீடுகளும் சேதமடைந்தன.

பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்கு வரத்தும் தடைபட்டது. புயல் காரணமாக விமானங்கள் அனைத் தும் ரத்து செய்யப்பட்டன. அந்நாட்டுடனான தொலைத் தொடர்பு பெருமளவில் பாதிக்கப் பட்டது. புயலால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 31 பேரை காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் புயல் குறித்து அந்நாட்டு பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கிரீட் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, ‘‘புயலால் ஏற்பட்ட சேதத் தால் நாடு 20 ஆண்டுகள் பின்னால் சென்றுவிட்டது போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள், பாலங்கள் இடிந்துள்ளன. பல சாலைகள் முற்றிலுமாக சேத மடைந்துவிட்டன. பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மற்றும் காபி பயிர்கள் சேதமடைந்து விட்டன. இதனால் ஏற்றுமதி வணிகம் பாதிக்கப்படும். இந்த சூழ்நிலை யில் நாம் மனஉறுதியுடன் செயல் பட வேண்டும். நமது நாட்டை மறுகட்டமைப்பது அவசியம். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x