Published : 14 Nov 2019 07:01 PM
Last Updated : 14 Nov 2019 07:01 PM
ஜிஹாதி பயங்கரவாதிகள் பாகிஸ்தானின் ஹீரோக்கள் என்றும் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் ஹீரோ என்றும் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்தார்.
மேலும் காஷ்மீரில் இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போராட காஷ்மீரிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டது என்றும் வரிசையாகக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தேதியிடப்படாத இந்த முஷாரப் நேர் காணலை பாகிஸ்தான் அரசியல்வாதி ஃபர்ஹத்துல்லா பாபர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில் பர்வெஸ் முஷாரப் கூறியிருப்பதாவது:
“1979-ம் ஆண்டில் பாகிஸ்தானின் பயனுக்காகவும் சோவியத் படைகளை விரட்டியடிக்கவும் ஆப்கானிஸ்தானில் மதத்தீவிரவாதத்தை அறிமுகம் செய்தோம். முஜாஹிதீன்களை உலகம் முழுதிலிருமிருந்து திரட்டி பாகிஸ்தான் கொண்டு வந்து ஆயுதப் பயிற்சி அளித்தோம். தாலிபான்களுக்கு பயிற்சி அளித்து ஆப்கான் அனுப்பினோம். அவர்கள் எங்கள் ஹீரோக்கள்.
ஹக்கானி எங்கள் ஹீரோ, பின்லேடன், ஜவாஹிரி ஆகியோர் எங்கள் ஹீரோக்கள். பிறகு உலகச் சூழ்நிலை மாறியது, விஷயங்களை உலக நாடுகள் வேறுமாதிரிப் பார்க்கத் தொடங்கி விட்டன. எங்கள் ஹீரோக்கள் வில்லன்களாக மாறிவிட்டனர்.”