Published : 14 Nov 2019 07:01 PM
Last Updated : 14 Nov 2019 07:01 PM

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவு

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவாகியது.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் அஷ்காஷம் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 87.9 கி.மீ.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள், உயிரிழப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. நிலநடுக்க அதிர்வுகள் பாகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் உணரப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, பாகிஸ்தானில் செப்டம்பர் மாதம் ரிக்டர் அளவில் 5.8 ஆக ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பெரும் உயிர் சேதமும், பொருளாதாரச் சேதமும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் இந்து குஷ் பகுதியில் ரிக்டர் அளவில் 6.3 என்ற அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் 100 பேர் வரை காயமடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x