

அமெரிக்க அதிபர் ஒபாமா - இந்திய பிரதமர் மோடி இடையே எந்நேரமும் எளிதில் தொடர்பு கொண்டு பேசக் கூடிய “ஹைட்லைன்” தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா, பிரிட்டன், சீனா நாட்டு தலைவர்களுக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபருடன் ஹாட்லைன் தொலைபேசி வசதியை பெற்றிருப்பது இந்திய பிரதமர்தான். இது தவிர இந்தியா அமெரிக்கா தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பேசிக் கொள்ளவும் ஹாட் லைன் வசதி செய்யப்பட்டுள்ளது.எனினும் மோடியும் ஒபாமாவும் இதுவரை அதனை பயன்படுத்தவில்லை.
இந்த ஆண்டு இந்திய குடியரசு தினத்தில் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண் டார். அப்போது ஒபாமா மோடி இடையே நடைபெற்ற சந்திப்பின் போது, தங்களுக்கு இடையே ஹாட்லைன் தொலைபேசி வசதியை ஏற்படுத்த இரு தலைவர்களும் முடிவு செய்தனர்.