

தங்களுக்கென புதிய நாணயத்தை விரைவில் வெளியிடபோவதாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை தெரிவித்த வீடியோவில் தங்களது இந்த செயல் வர்த்தக மைய தாக்குதலை போல, அமெரிக்காவுக்கான 2வது பதிலடியாக இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பயங்கரவாத அமைப்புகளை உளவு பார்க்கும் சைட் கண்காணிப்பு மையம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
'கலிஃபாவின் எழுச்சியும் தங்க திணாரின் மறுவருகையும்' என்ற தலைப்பில் இந்த வீடியோ கடந்த சனிக்கிழமை வெளியானது. வெள்ளி, தங்கம் உள்ளிட்ட நாணயங்களை தயாரிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
மனித மற்றும் மிருகங்களின் உருவங்கள் இல்லாத தங்களுக்கென்ற நாணயத்தை ஐ.எஸ். வெளியிட உள்ளதாக தி ஜெருசலென் போஸ்ட் பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளது.