கர்தார்பூர் வழித்தடம் நாளை திறப்பு: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு பாகிஸ்தான் அழைப்பு

கர்தார்பூர் வழித்தடம் நாளை திறப்பு: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு பாகிஸ்தான் அழைப்பு
Updated on
1 min read

இஸ்லாமாபாத்

கர்தார்பூர் வழித்தடம் திறப்பு விழாவில் பங்கேற்க வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

கர்தார்பூர் வழித்தடத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாளை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் தேவ், தமது இறுதி காலத்தை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள பாகிஸ்தானில் தற்போதுள்ள கர்தார்பூரில் கழித்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அவரது நினைவாக கர்தார்பூரில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ‘தர்பார் சாஹிப்' என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டது.

பாகிஸ்தானுக்கு விசா வாங்கி செல்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்ததால் கர்தார்பூர் குருத்வாராவுக்கும் இடையே வழித்தடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in