சீக்கிய யாத்ரீகர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நடவடிக்கை: பாக். அறிவிப்பு

கர்தார்பூர் சாஹிப் | கோப்புப் படம்.
கர்தார்பூர் சாஹிப் | கோப்புப் படம்.
Updated on
1 min read

லாஹூர்

குருநானக் தேவின் 550-வது பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள வரும் சீக்கிய யாத்ரீகர்கள் குருத்வாராக்களில் எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் வரும் சனிக்கிழமை அன்று நடைபெற உள்ள கர்தார்பூர் நடைபாதை திறப்பு விழா மற்றும் அடுத்த வாரம் நடைபெற உள்ள குருநானக் தேவின் 550-வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள இதுவரை 4,500க்கும் மேற்பட்ட இந்திய சீக்கியர்கள் கர்தார்பூர் சாஹிப் வந்துள்ளனர்.

குருநானக் தேவின் 550-வது பிறந்த நாள் மற்றும் கர்தார்பூர் நடைபாதை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சீக்கிய யாத்ரீகர்கள் நாட்டிற்கு வருகை தந்தபோது குருத்வாராக்களில் எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட அனுமதிக்க மாட்டார்கள் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

எவாக்யூ டிரஸ்ட் சொத்து வாரியத்தின் (ஈடிபிபி) தலைவர் டாக்டர் அமீர் அகமது பி.டி.ஐ.யிடம் கூறியதாவது:

''இந்தியாவிலிருந்து கர்தார்பூர் நடைபாதையின் திறப்பு விழா நவம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் கர்தார்பூர் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானும் அதே நாளில் பாகிஸ்தானில் உள்ள அதன் பாதையைத் திறந்துவைப்பார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குருத்வாரா பஞ்சா சாஹிப்பில் சீக்கிய மதத்தை நிறுவிய பாபா குருநானக் தேவின் 550-வது பிறந்த நாள் வரும் நவம்பர் 12-ம் தேதி அன்று விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த இவ்விரு நிகழ்ச்சிகளுக்கும் வருகை தரும் சீக்கிய யாத்ரீகர்கள் குருத்வாராவிலும் மத விழாக்களிலும் எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் திங்களன்று வெளியிட்ட 4 நிமிட வீடியோவில், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே, அவரது ராணுவ ஆலோசகரான ஷாபேக் சிங் மற்றும் அம்ரிக் சிங் கல்சா ஆகியோரின் பின்னணியில் சுவரொட்டி இடம் பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு எனது பதில், அது தொடர்பான எதுவும் எனது கவனத்திற்கு வரவில்லை என்பதுதான்.

ஆனால் வருகை தரும் சீக்கியர்களால் எந்தவொரு அரசியல் நடவடிக்கையையும் பாகிஸ்தான் அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது".

இவ்வாறு எவாக்யூ டிரஸ்ட் சொத்து வாரியத்தின் (ஈடிபிபி) தலைவர் டாக்டர் அமீர் அகமது தெரிவித்தார்.

ஈடிபிபி என்பது பிரிவினையைத் தொடர்ந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் மத சொத்துகள் மற்றும் ஆலயங்களை நிர்வகிக்கும் ஒரு பாகிஸ்தான் அரசின் சட்டப்பூர்வ குழு ஆகும்.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in