

இலங்கை ரக்பி வீரர் கொலையில் முன்னாள் அதிபர் ராஜபக்சவின் மகனுக்கு தொடர்பு இருப்பதாக அந்த நாட்டு போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் குற்றச்சாட்டை ராஜபக்ச மறுத்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன். இவர் 2012-ம் ஆண்டில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். ஆனால் அவர் சாலை விபத்தில் இறக்கவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என்று போலீஸார் தெரிவித்துள் ளனர்.
பெண் விவகாரம் தொடர்பாக வாசிம் தாஜுதீனுக்கும் ராஜபக் சவின் இளைய மகன் யோசித வுக்கும் இடையே பகைமை இருந் துள்ளது. இதன்காரணமாக வாசிம் கொலை செய்யப்பட்டு விபத்தில் உயிரிழந்ததாக நாடகமாடப் பட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கு கொழும்பு நீதிமன்றத்தில் நடை பெறுகிறது. நீதிபதி உத்தரவின் பேரில் நேற்று வாசிம் தாஜுதீனின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.