இந்திய வரைபடத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர்: பாகிஸ்தான் எதிர்ப்பு

இந்தியா வெளியிட்டுள்ள புதிய வரைபடம்
இந்தியா வெளியிட்டுள்ள புதிய வரைபடம்
Updated on
1 min read

இஸ்லாமாபாத்,

இந்தியா வெளியிட்டுள்ள வரைபடங்களை பாகிஸ்தான் அரசு இன்று நிராகரித்தது, இது கில்ஜித் பாகிஸ்தான், பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட முழு காஷ்மீர் பிராந்தியத்தையும் தனது பகுதியாகக் காட்டியது தவறானது. இது சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் ஆகஸ்ட் 5 அறிவிப்புக்கு இணங்க 370 வது பிரிவின் கீழ் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டது. மேலும் ஜம்மு-காஷ்மீரை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் எனவும் அன்று அறிவித்து, அதன்படி இந்திய அரசு கடந்த அக்டோபர் 31 அன்று (வியாழக்கிழமை) இரு யூனியன் பிரதேசங்களாக உதயமாயின.

புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர், மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களை சித்தரிக்கும் புதிய வரைபடங்களையும் புதிய யூனியன் பிரதேசங்கள் அடங்கிய இந்திய வரைபடத்தையும் இந்தியா நேற்று வெளியிட்டது.

வரைபடங்களில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாகும், அதே நேரத்தில் கில்ஜித்-பலுசிஸ்தான் லடாக் யூனியன் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''(அரசியல் வரைபடங்கள்) ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்தைக் காண்பிக்கும் மற்றும் கில்ஜித்-பலுசிஸ்தான் மற்றும் ஆசாத் ஜம்மு காஷ்மீர் பகுதிகளை இந்தியாவின் பிராந்திய எல்லைக்குள் சித்தரிக்க முயல்கின்றன, அவை தவறானவை, சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாதவை, தொடர்புடைய ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை முழுமையாக மீறுவது ஆகும்.

ஐக்கிய நாடுகளின் வரைபடங்களுடன் பொருந்தாத இந்த அரசியல் வரைபடங்களை பாகிஸ்தான் நிராகரிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் சர்ச்சைக்குரிய நிலையை மாற்ற இந்தியா எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்திய அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான மறுக்கமுடியாத உரிமையில் பாரபட்சம் காட்ட முடியாது.

சம்பந்தப்பட்ட ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் தீர்மானங்களின்படி, சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்துவதற்காக இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர் மக்களின் நியாயமான போராட்டத்திற்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளிக்கும்.

இவ்வாறு பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in