

இராக்கில் போராட்டக்காரர்களுக்கு எதிரான தாக்குதலை ஷியா மத குருமார்கள் கண்டித்துள்ளனர்.
இராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் அதில் அப்துல் மஹ்திக்கு எதிராக, மூன்று வாரங்களுக்கு மேலாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இராக்கில் இம்மாத்தில் துவங்கிய இப்போராட்டத்தில் தற்போதுவரை 250 பேர் பலியாகி உள்ளனர். 2,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
தொடர்ந்து அரசை எதிர்த்து இராக்கில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
பாக்தாத்தில் தாஹிர் சதுக்கத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கு மோதல் வெடித்தது. இதில் பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 50 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை இராக்கில் உள்ள ஷியா மதகுருமார்கள், “அமைதியாக போராடுபவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அனைத்தும் வன்முறையே” என்று கண்டித்துள்ளனர்.
முன்னதாக இராக்கில் நடைபெறும் அரசுக்கு எதிரான போராட்டத்தை அமெரிக்கா தூண்டுகிறது என்று ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.