

இந்தியாவுக்கு பாதகமான அம்சம் சேர்க்கப்பட்டதால், அமெரிக்காவு டனான அணுசக்தி உடன்பாட்டை கைவிட, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கடைசி நிமிடத்தில் கூட தயாராக இருந்தார் என முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2005-ம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் 10-ம் ஆண்டு நிகழ்ச்சி சர்வதேச அமை திக்கான கார்னீஜ் அறக்கட்டளை சார்பில் வாஷிங்டனில் நடந்தது.
இதுதொடர்பான கருத்தரங் கில் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோ சகர் எம்.கே. நாரயணன் பங்கேற் றார். நிகழ்ச்சியில் நாராயணன் பேசியதாவது:
இந்தியா அமெரிக்கா இடையே ஆக்கப்பூர்வமான அணுசக்தி உடன்பாடு எட்டப்படும் தேதியை அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ் அறிவித்திருந்தார். ஆனால், சர்வதேச பாதுகாப்பு விதிமுறைகளுக்கு விலக்காக இரு அணுஉலைகள் மட்டுமே இந்தியாவில் செயல்படலாம் என்ற பரிந்துரை சேர்க்கப்பட்டிருந்தது.
ஜூலை 17-ம் தேதி இரவு பிரதமர் மன்மோகன் சிங், ஒப்பந்தத்தைக் கைவிட எடுத்த முடிவு தொடர்பாக உண்மையான தகவலைப் பதிவு செய்ய விரும்புகிறேன். முதலில் குறிப்பிட்ட எண் ணிக்கையிலான அணு உலைகளை சர்வதேச பாதுகாப்பு நெறிமுறைக் கண்காணிப்பிலிருந்து விலக்கு அளித்து செயல்பட அனுமதிக் கப்பட இருந்தது.
பிரதமர் அமெரிக்கா சென் றிருந்தபோது, 6 முதல் 8 அணு உலைகள் சர்வதேச பாது காப்பு நெறிமுறைக் கண்காணிப் பிலிருந்து விலக்களிக்க முடிவு செய்யப்பட்டிருந்ததை, 2 அணு உலைகளாகக் குறைத்தனர்.
இந்திய வெளியுறவுத் துறை இதனை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கருதியது. எனவே, அன்றிரவு (ஜூலை 17) 12.05 மணிக்கு பிரதமர் கூறிய வார்த்தைகளை இங்கு பயன்படுத்த விரும்புகிறேன். “அணுசக்தி கழக தலைவர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் இந்த அணுஉலைகளின் எண்ணிக்கைக்கு உடன்பட மறுத்தால் அம்முடிவை ஏற்று, இந்த ஒப்பந்தத்தை கைவிட்டுவிடலாம்” என்று உறுதியாகச் சொன்னார் மன்மோகன் சிங்.
இம்முடிவு, அமெரிக்கர்களுக்கு உறுதியாகத் தெரிவிக்கப்பட்டது. வெள்ளை மாளிகைக்கு இத் தகவல் அளிக்கப்பட்டதும், அதிபர் ஜார்ஜ் புஷ், வெளியுறவுச் செயலர் காண்டலீஸா ரைஸை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க அனுப்பி வைத்தார். ஆனால், அந்த சூழலில் காண்டலீஸா ரைஸை சந்திக்க பிரதமர் மறுத்துவிட்டார்.
இதையடுத்து, அப்போதைய வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங்கை ரைஸ் சந்தித்தார். பின்னர் நட்வர் சிங், காண்டலீஸாவை பிரதமரிடம் அழைத்துச் சென்றார்.
இந்தியாவின் கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக் கொண்ட பிறகே, ஒப்பந்தத்துக்கு மன் மோகன் சம்மதித்தார். மன்மோகன் சிங்கின் 150 சதவீத பங்களிப்பு இல்லாவிட்டால், இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு சாதகமாக நிறை வேறியிருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.