

டெக்னாலஜியில் இரு பெரும் முக்கிய நிறுவனங்களாக உள்ள ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களும் தங்களிடையே நிலவிவந்த காப்புரிமை (ஸ்மார்ட் போன்) பிரச்சினையில் சமரச முடிவை எடுத்துள்ளன.
இதன்படி ஒன்றை ஒன்று எதிர்த்து தொடர்ந்த அத்தனை வழக்குகளையும் விலக்கிக் கொண்டன. மோட்டரோலா நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் மீது நான்கு வருடங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தது. இதை தொடர்ந்து பல வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்கள் வரை சென்றது. இப்போது இது முடிவுக்கு வந்திருக்கிறது. இருந்தாலும் இரு நிறுவனங்களுக்கிடையில் டெக்னாலஜி உரிமத்தை பகிர்ந்து கொள்வதற்கு இந்த ஒப்பந்தத்தில் இடமில்லை.
இரண்டு வாரங்களுக்கு முன்பு சாம்சங் - ஆப்பிள் நிறுவன காப்புரிமை பிரச்சினையில் ஆப்பிள் நிறுவனத்துக்கு 119.6 மில்லியன் டாலரை இழப்பீடாக வழங்க சொல்லி சாம்சங் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.