Published : 30 Oct 2019 06:27 PM
Last Updated : 30 Oct 2019 06:27 PM

‘பருவநிலை சூழலிய இயக்கங்களுக்கு விருதுகள், பணமுடிப்புகள் தேவையில்லை’- 5 லட்சம் ஸ்வீடிஷ் க்ரோனர் பரிசுத் தொகையைப் புறக்கணித்த கிரெட்டா துன்பெர்க்

பருவ நிலை மாற்றம், சூழலியல் கேடு தொடர்பாக ஐநாவில் உலகத் தலைவர்கள் முன்னிலையில் விமர்சித்துப் பிய்த்து உதறிய ஸ்வீடன் நாட்டு பருவநிலை மாற்றத்துக்கு எதிரான இயக்கத்தைச் சேர்ந்த சிறுமி கிரேட்டா துன்பெர்க் நார்டிக் கவுன்சிலின் 2019-ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருதினை கடும் விமர்சனத்துடன் புறக்கணித்தார்.

“அரசியல்வாதிகளும் அதிகாரத்தில் உள்ளவர்களும் நடப்பு அறிவியல்களை, பருவநிலை மாற்றங்கள் குறித்த ஆய்வுகளை விமர்சனங்களைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும்” என்று சாடினார் கிரெட்டா.

வானிலை நீதி போராட்ட இயக்கத்தின் முன்னணிச் செயல்பாட்டாளரான இந்தச் சிறுமி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தன் பள்ளிப்படிப்பைத் துறந்து சுவீடன் நாட்டுப் பாராளுமன்றத்தின் முன்பு போராட்டம் நடத்தி வருகிறார்.

உலக ஆய்வறிக்கை ஒன்றைச் சுட்டிக் காட்டி தன்பெர்க் கூறும்போது, நார்வே அரசு சமீபமாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க எண்ணற்ற அனுமதிகளை வழங்கியுள்ளது. இதன் மூலம் கரியமிலவாயு வெளியேற்றம் 1.3 டன்களாக அதிகரிக்கும். புவிவெப்பமடைதல் பருவ நிலை சீரழிவுகள் பற்றி அறிவியல் கூறுவதற்கும் நார்டிக் அரசுகள் செய்யும் வேலைகளுக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. மாற்றங்களுக்கான அறிகுறி கூட தென்படவில்லை, என்று சாடினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x