பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கவலைக்கிடம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கவலைக்கிடம்
Updated on
1 min read

லாகூர்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் வழக்கில் அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து லாகூ ரில் உள்ள கோட்லாக்பாத் சிறை யில் நவாஸ் ஷெரீப் அடைக்கப் பட்டார்.

இந்நிலையில் அவருக்கு 2 நாட்களுக்கு முன்னதாக திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பு என கருதி சிறையில் உள்ள மருத்துவமனையில் அவ ருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது.

இதைத் தொடர்ந்து அவ ருக்கு ரத்தப் பரிசோதனை செய் யப்பட்டது. அப்போது அவருக்கு என்எஸ்டிஇஎம்ஐ வகையிலான மாரடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அவரது ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகள் படிப் படியாக குறைந்து இதயத்துக்கு வரும் ரத்த அளவு குறைவதே இந்த நோயின் தன்மை யாகும்.

இதனிடையே சிறையில் தனது தந்தைக்கு விஷம் கொடுக்கப்பட்டதால்தான் அவ ரது உடல் நிலை பாதிப்பட்டதாக நவாஸ் ஷெரீப்பின் மகன் குற்றம் சாட்டி இருந்தார். இது பாகிஸ் தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு ரத்த அணுக்களின் எண்ணிக்கை 2 ஆயிரம் ஆக குறைந்தது. இதனால் நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக அவர் லாகூரில் உள்ள ராணுவ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வும், உயிருக்குப் போராடி வரு வதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் அவரது குடும்ப மருத்துவர் அட்னான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித் துள்ளார். மேலும் நவாஸ் ஷெரிப் ரத்த அழுத்தமும் குறைந்து வருவதாக அதில் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in