Published : 29 Oct 2019 12:51 PM
Last Updated : 29 Oct 2019 12:51 PM

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியது.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தரப்பில், “பிலிப்பைன்ஸ்ஸின் வடகிழக்கு மாகாணமான கோடாபடோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த நிலநடுக்கம் காரணமாக துலுனான் நகரில் இரண்டு பேர் பலியானதாகவும், அங்குள்ள பள்ளி ஒன்று இந்த நிலநடுக்கம் காரணமாக பாதிப்படைந்ததால் அதில் பயின்ற மாணவர்கள் பலர் காயமடைந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிலநடுக்கம் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

முன்னதாக பிலிப்பைன்ஸில் கடந்த அக்டோபர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 7 பேர் பலியாகினர். 215 பேர் காயமடைந்தனர்.

ரிங் ஆஃப் ஃபயர்

ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா வழியாகவும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் ‘தீவிர நில அதிர்வு விளைவுகளின் வளைவு’ என அழைக்கப்படும் பசிபிக் 'ரிங் ஆஃப் ஃபயர்'-ன் ஒரு பகுதி பிலிப்பைன்ஸின் சிறுபகுதியையும் உள்ளடக்கி உள்ளது.

இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் தொடர் நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் அவ்வப்போது சுனாமி பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x