

சவுதி அரேபியாவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள 45 வயதான இளவரசர் பைசல் சவுதியில் பல தனியார் மற்றும் பொதுப் பணிகளில் பல பதவிகளை வகித்தவர்.
சவுதியின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் குறித்து, வெளியுறவுத் துறையின் ஐரோப்பிய கவுன்சில் மத்திய கிழக்கு நாடுகளின் ஆய்வாளர் கூறும்போது, “புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் அரேபிய நாடுகளுடன் பாரம்பரியமான உறவுகளை கொண்டிருக்கிறார். சிறப்பாக செயல்படுவார்” என்று தெரிவித்துள்ளது.
இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கொடூரமாக கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சவுதி வெளியுறவு அமைச்சகம் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியது. மேலும் சவுதியின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் பலர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இந்தச் சர்ச்சைகளுக்குப் பிறகு தற்போது புதிய வெளியுறவு அமைச்சராக இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரது புதிய நியமனம் வெளியுறவு கொள்கை மற்றும் ஈரானுடனான சவுதியின் உறவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.