Published : 24 Oct 2019 09:01 AM
Last Updated : 24 Oct 2019 09:01 AM

பிரதமர் மோடியின் காஷ்மீர் நடவடிக்கை சரியானது: இந்திய வம்சாவளி அமெரிக்க அட்டார்னி ரவி பத்ரா கருத்து

வாஷிங்டன்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது பிரதமர் மோடியின் சரியான நடவடிக்கை என அமெரிக்க அட்டார்னியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வருமான ரவி பத்ரா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான (பிரதிநிதிகள் அவை) எலியாட் ஏஞ்சல், நாடாளுமன்ற வெளியுறவு விவகாரங்கள் குழு வின் தலைவராக உள்ளார். இக் குழுவின் ஒரு அங்கம்தான் மனித உரிமைகளுக்கான நாடாளுமன்ற துணைக் குழு (தெற்கு ஆசியா). இக்குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் எலியாட் அழைப்பின் பேரில், நியூயார்க் அட்டார்னியும் இந்திய அமெரிக்கருமான ரவி பத்ரா பங்கேற்றார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் அங்கு மனித உரிமை நிலைநாட்டப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் வலியுறுத்தினர்.

அப்போது ரவி பத்ரா பேசும்போது, “காஷ்மீரில் எல்லை தாண்டிய தீவிரவாதம் அன்றாட நிகழ்வாக உள்ளது. உள்ளூரி லேயே தீவிரவாதிகள் வளர்த் தெடுக்கப்படுகிறார்கள். இதனால், அப்பகுதி மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியில் செல் லவே பயப்படுகின்றனர். தங் களுக்கு மனித உரிமை வேண்டும் என சிலர் விரும்பும் அதேநேரத்தில், அதற்கு முன்பு உயிருடன் இருக்க வேண்டும் என கருதுகின்றனர்.

மன்னிப்பு கோருகிறேன்

மும்பையில் 2008-ல் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலின்போது, யூதர்கள் மற்றும் அமெரிக்கர்களை இலக்குவைத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அப்போது, இந்தியா நிதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என சிலர் வாதிட்டனர். அதில் நானும் ஒருவன்.

இதற்காக மன்னிப்பு கோருகி றேன். நான் தவறு செய்துவிட்டேன். தீவிரவாதம் ஒழிக்கப்பட்டால் மட்டுமே நமது உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் அர்த்தம் கிடைக்கும்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஆப்ரஹாம் லிங்கனைப் போல, இந்திய பிரதமர் நரேந்திர மோடி யும் அசாதாரணமாக செயல் பட்டதை காண முடிகிறது. அவர் காஷ்மீர் விவகாரத்தில் சட்ட ரீதியாக சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளார்.

அனைத்து இந்தியர்களுக்கும் சம உரிமையும் சுதந்திரமும் கிடைக்க உறுதி செய்யப்படும் என கொடுத்த வாக்குறுதியை நிலைநாட்டவே இந்த நடவடிக் கையை எடுத்ததாக மோடி தெரிவித்துள்ளார். மிகுந்த கவனத் துடன் ஆகஸ்ட் 5-ம் தேதி மோடியால் எடுக்கப்பட்ட அந்த நடவடிக்கை நியாயம் மிக்கது. இதனால் சண்டை மூளவில்லை. தொலைத்தொடர்பு சேவை மற்றும் இணையதள சேவை துண்டிக் கப்பட்டதால், தீவிரவாதிகள் முடக் கப்பட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x