

லண்டனில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட 39 பேரின் உடல்களை போலீஸார் கண்டெடுத்துள்ளனர்.
இதுகுறித்து பிரிட்டிஷ் போலீஸார் தரப்பில், “லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் லாரி ஒன்றில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட 39 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உடல்கள் கண்டெடுக்கப்பட்ட லாரி, பல்கேரியாவிலிருந்து வேல்ஸ் வழியாக கடந்த சனிக்கிழமையன்று லண்டன் நுழைந்துள்ளது. இந்த லாரியை ஓட்டி வந்த 25 வயதான வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் தலைமை போலீஸ் அதிகாரி ஆண்ட்ரிவ் மாரினர் கூறும்போது, “நாங்கள் கொல்லப்பட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இதற்கு நீண்டகால அவகாசம் தேவைப்படும். விசாரணை தொடர்ந்து நடை பெற்று வருகிறது” என்றார்.
கொல்லப்பட்ட நிலையில் 39 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது லண்டனில் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.