Published : 20 Oct 2019 07:36 PM
Last Updated : 20 Oct 2019 07:36 PM

உலகின் பழமையான முத்து அபுதாபியில் கண்டெடுப்பு: விரைவில் பாரிஸ் அருங்காட்சியகத்தில் இடம்பெறும்

உலகின் பழமையான முத்து | படம்: ட்விட்டர் தளம்

அபு தாபி,

உலகின் பழமையானது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறும் 8,000 ஆண்டுகள் பழமையான முத்து ஒன்று அபுதாபியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அது விரைவில் காட்சிக்கு வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கற்காலத்தில் இருந்தே பொருட்கள் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளன என்பதற்கான சான்று இது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

8,000 ஆண்டுகள் பழமையான இந்த முத்தின் அடுக்குகள் கி.மு 5800-5600 காலகட்டத்தைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது.

அபுதாபியில் கண்டெடுக்கப்பட்டுள்ள உலகின் மிகப் பழமையான முத்து நமது சமீபத்திய பொருளாதார மற்றும் கலாச்சார வரலாற்றில் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது, இது வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் வரை நீண்டுள்ளது. எண்ணற்ற சரிந்த கற்கால கல் அமைப்புகளால் ஆன மராவா தளத்தின் அகழ்வாராய்ச்சியில் மட்பாண்டங்கள், கிளிஞ்சல் மற்றும் கல்லால் செய்யப்பட்ட மணிகள் மற்றும் பிளின்ட் அம்புக்குறிகள் கிடைத்துள்ளன.

வரும் அக்டோபர் 30 புகழ்பெற்ற பாரிஸ் அருங்காட்சியகத்தின் புறக்காவல் நிலையமான லூவ்ரே அபுதாபியில் அன்று 10 ஆயிரம் ஆண்டுக் கால விலைமதிப்பற்ற பழமையான கலைப்பொருட்களுக்கான கண்காட்சி திறக்கப்பட உள்ளது. அதில் இந்த உலகின் பழமையான அபுதாபி முத்துவும் காட்சிக்கு வைக்கப்படும்.

மெசபடோமியா - பண்டைய ஈராக் - உடன் மட்பாண்டங்கள் மற்றும் பிற பொருட்களுக்கு ஈடாக முத்துக்கள் வர்த்தகம் செய்யப்பட்டதாக அமீரக நிபுணர்கள் நம்புகின்றனர். அவர்கள் அவற்றை நகைகளாகவும் அணிந்திருக்கலாம். இப்பகுதியில் பயணம் செய்த வெனிஸ் நகை வியாபாரி காஸ்பரோ பால்பி, அபுதாபியின் கரையோரத்தில் உள்ள தீவுகளை 16 ஆம் நூற்றாண்டில் முத்துக்களின் ஆதாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அபுதாபி ஐக்கிய அரபு அமீரக கலாச்சாரத்துறை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒரு காலத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொருளாதாரத்தையே முத்துத் தொழில் ஆதரித்து வந்துள்ளது, ஆனால் 1930 களில் ஜப்பானிய செயற்கை முத்துக்களின் வருகையால் வர்த்தகம் சரிந்தது, மேலும் அதன் பின் உருவான மோதல்கள் உலகளாவிய பொருளாதாரங்களை உலுக்கின. மாறாக, வளைகுடா நாடுகள் இன்றுவரை தங்கள் பொருளாதாரங்களில் ஆதிக்கம் செலுத்தும் எண்ணெய் தொழிற்துறையை நோக்கி திரும்பின என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x