Published : 20 Oct 2019 03:56 PM
Last Updated : 20 Oct 2019 03:56 PM

சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியா அழைத்து வருவோம்: நிர்மலா சீதாராமன்

வாஷிங்டன்

சீனாவில் இருந்து வெளியேறி வரும் தொழில் நிறுவனங்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் நி்ரமலா சீதாராமன் கூறினார்.

அமெரிக்காவில் சர்வதேச நிதியம், உலக வங்கி ஆகியவற்றின் ஆண்டுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்றுள்ளார்.

சர்வதேச நிதியத்தின் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

சீனாவில் இருந்து வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்களை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுப்போம். சீனாவில் இருந்து வெளியேறி வரும் தொழில் நிறுவனங்கள் குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம். இதன் பிறகு அவர்களை தொடர்பு கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தொழில் வாய்ப்பும், சந்தை வாய்ப்பும் உண்டு. தொழிலாளர் வளம் உள்ளது. இதனை அந்த நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியம். எலெட்ரானிக்ஸ், பாட்டரிகள், செமி கண்டெக்டர்கள் போன்றவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதிகஅளவில் வாய்ப்புள்ளது’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x