Published : 20 Oct 2019 03:53 PM
Last Updated : 20 Oct 2019 03:53 PM

சோதனை ஓட்டம்வெற்றி: உலகின் மிகநீண்ட தொலைவு பறக்கும் பயணிகள் விமானம் சிட்னி வந்தடைந்தது

சிட்னி


இடைநில்லாமல் உலகில் நீண்ட தொலைவு பறக்கும் விமானம் நியூயார்க் நகரிலிருந்து புறப்பட்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு இன்று காலை சென்றடைந்தது.

நியூயார்க் முதல் சிட்னி வரை இடைநில்லாமல் 19 மணிநேரம் 16 நிமிடங்கள்பயணித்துள்ளது குவான்டாஸ் நிறுவனத்தின் குவாண்டாஸ் கியுஎப்7879 பயணிகள் விமானம்.

நியூயார்க் நகரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 49 பேருடன் புறப்பட்ட போயிங் 787-9 ரக விமானம் இடைநில்லாமல் பயணிக்கும் அளவுக்கு போதுமான எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது. ஏறக்குறைய 16 ஆயிரம் கி.மீ தொலைவு பறக்கும் அளவுக்கு எரிபொருள் இருந்தது. இந்நிலையில் 19 மணிநேரத்துக்கும் அதிகமாக வானில் பறந்து இன்று காலை சிட்னி நகரை விமானம் சென்றடைந்தது.

குவான்டஸ் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆலன் ஜோய்ஸ் கூறுகையில், " உண்மையில் 19 மணிநேரத்துக்கும் மேலாக இடைநில்லாமல் விமானம் பறந்துள்ளது வரலாற்று நிகழ்வு. பயணிகளையும், பைலட்களையும் எவ்வாறு மேலாண்மை செய்வது என்பதை இதில் கற்றுக்கொண்டோம்" எனத் தெரிவித்தார்

குவான்டாஸ் நிறுவனம்ரு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகங்களுட கூட்டு வைத்து, 19 மணிநேர இடைவிடாது பயணம் எவ்வாறு பயணிகள் உடல்நலத்தைப் பாதிக்கும் என்பது குறித்து ஆய்வு செய்தார்கள்.

விமானம் புறப்பட்டவுடன் பயணிகள் அனைவரும் தங்களின் கைக்கடிகாரத்தின் நேரத்தை சிட்னி நேரத்துக்கு மாற்றிவைத்தனர்.
பயணிகள், விமானியின் உடல்நிலை, மெலோட்டின் அளவு, மூளையின் அதிர்வலை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.
வழக்கமாக இரவு நேரத்தில் விமானம் புறப்பட்டவுடன் இரவு உணவு அளிக்கப்பட்டு பயணிகள் தூங்குவதற்கு அறிவுறுத்தப்படுவார்கள்.

ஆனால், இந்த விமானத்தில் இரவு உணவுக்குப் பதிலாக மதிய உணவு அளித்து, 6 மணிநேரம் விழித்திருக்கச் செய்து, அதன்பின் பயணிகளுக்கு இரவு உணவு அளித்து தூங்க அனுமதிக்கப்பட்டார்.

கிழக்கு ஆஸ்திரேலியாவில் இரவு வரும் அனைவரும் விழித்திருக்க வைத்து உணவு வழங்கப்பட்டது. 6 மணிநேரத்துக்குப்பின் அவர்களுக்கு கார்போ ஹைட்ரேட் உணவுகள் வழங்கப்பட்டு, வெளிச்சமான திரை, விளக்குகளைப் பார்க்காமல் தூங்குமாறு அறிவுறுத்தப்பட்டார்கள். விமானத்த இயக்குவதற்காக வழக்கமாக இரு விமானிகள் இருக்கும் நிலையில் இந்த விமானத்தில் 4 விமானிகள் பயணித்தனர். 4 விமானிகளும் மாறி, மாறி தங்கள் பணியைச் செய்தார்கள்.

இந்த விமானத்தில் ஆய்வில் ஈடுபட்ட சிட்னி பல்கலைக்கழக பேராசிரியர் மரியே காரோல் கூறுகையில், " மிகவும் புதிதான ஆய்வில் ஈடுபட்டோம், குறைந்த வித்தியாசத்தில்தான் முடிவு வந்துள்ளது. விமான நிறுவனங்கள் பயணிகளின் உணவு, குடிப்பதற்குக் கொடுக்கும் பானம், உடற்பயிற்சி, வெளிச்சம் ஆகியவற்றை விமானம் எங்குச் சென்றடைகிறதோ அதற்கு ஏற்றார்போல் மாற்றிக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x