ரஷ்யாவில் அணை உடைந்து விபத்து: 12 பேர் பலி

ரஷ்யாவில் அணை உடைந்து விபத்து: 12 பேர் பலி
Updated on
1 min read

ரஷ்யாவில் அணை உடைந்து விபத்து ஏற்பட்டதில் 12 பேர் பலியாகினர். 15க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இதுகுறித்து ரஷ்ய அரசுத் தரப்பில், “ரஷ்யாவின் க்ராஸ்னோயர்ஸ்க் நகரில் அமைந்துள்ள அணை ஒன்று இன்று (சனிக்கிழமை) உடைந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக அங்கு பணி செய்து கொண்டிருந்தவர்களில் 12 பேர் பலியாகினர். 15க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பலர் மாயமாகியுள்ளனர்.

மேலும் விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்க மீட்புப் பணி நடந்து வருகிறது. மீட்புப் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அணை கட்டப்படாததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து ஏற்பட்டதற்கான உண்மை நிலவரம் இதுவரை தெரியவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in