பண நெருக்கடி: வார இறுதி நாட்களில் ஐ.நா. தலைமையகம் மூடப்படும்

பண நெருக்கடி: வார இறுதி நாட்களில் ஐ.நா. தலைமையகம் மூடப்படும்
Updated on
1 min read

பண நெருக்கடி காரணமாக ஐ. நா. சபையின் தலைமையகம் இனிவரும் வார இறுதி நாட்களில் மூடப்படுவதாக என்று அதன் தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா தனது ட்விட்டர் பக்கத்தில், “நியூயார்க்கில் உள்ள ஐ. நாவின் தலைமையகம் பண பற்றாக்குறை காரணமாக இனி வார இறுதி நாட்களில் மூடபடும்” என்று தெரிவித்துள்ளது.

மேலும், ஐ.நா. பட்ஜெட்டுக்கான பண வழங்கியநாடுகளின் விவரம் பற்றிய ஆவணத்தையும் வெளியிட்டுள்ளது. இதில் 30 நாடுகள் மட்டுமே குறிப்பிட்ட காலத்துக்குள் முழு தொகையை செலுத்தி உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவுக்கான ஐ.நா.தூதர் சையத் அக்பரூதின் ஐ.நா.பட்ஜெட்டுக்கான முழு தொகையை செலுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றார்.

முன்னதாக ஐ.நா. சபையில் ஏற்பட்டுள்ள பணப் பற்றாக்குறை காரணமாக கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை ஒத்திவைத்தல், செலவுகளைக் குறைத்தல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட இருக்கிறோம் என்றும் அதன் பொதுச் செயலாளர் அண்டோனியா குத்தேரெஸ் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குத்தேரெஸ் பணப் பற்றாக்குறையப் போக்க உறுப்பு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால், உறுப்பு நாடுகள் வழங்க மறுத்துவிட்டன என்ற ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2018 - 2019 ஆம் ஆண்டுவரை ஐ.நா. சபைக்குத் தேவையான பட்ஜெட் 5.4 பில்லியன் டாலர். இதில் அமெரிக்கா மட்டும் 22% சதவீதம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in