Published : 17 Oct 2019 06:17 PM
Last Updated : 17 Oct 2019 06:17 PM

அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் துயரத்தை அனுபவிக்கிறது ஈரான்: ஐ.எம்.எஃப்.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடையினால் ஈரான் கடினமான துயரத்தை அனுபவிக்கிறது என்று பன்னாட்டு நிதியமைப்பான ஐ.எம்.எஃப். தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பன்னாட்டு நிதியம் ( International Monetary Fund) கூறுகையில், “ ஈரானின் பொருளாதார நிலைமை மோசமான நிலையை அடைந்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக அமெரிக்காவின் பொருளாதாரத் தடையினால் ஈரான் கடினமான துன்பத்தை அனுபவித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது.

ஈரானில் நிலவும் மோசமான பொருளாதார நிலை குறித்து ஈரான் பொருளாதார நிபுணர் ஒருவர் கூறும்போது, “இம்மாதிரியான மோசமான பொருளாதார நிலை ஈரான் வரலாற்றில் அரிது. ஈராக் உடன் ஏற்பட்ட போரின்போது கூட எங்களுக்கு இத்தகைய பொருளாதார நிலை ஏற்படவில்லை” என்றார்.

முன்னதாக, எங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்து மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களை அமெரிக்கா செய்கிறது என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்தார்.

ஈரான் - அமெரிக்கா மோதல்

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் அந்நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

மேலும் சமீபத்தில் சவுதி எண்ணெய் ஆலை கப்பல் தாக்கப்பட்டதன் பின்னணியில் ஈரான்தான் உள்ளது என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x