

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 நாள் அரசுமுறைப் பயணமாக பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார்.
பிலிப்பைன்ஸ் - இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ விடுத்த அழைப்பை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோர் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவைச் சென்றடைந்தனர்.
பிலிப்பைன்ஸ் அதிபர் அரண்மனையில் ராம்நாத் கோவிந்திற்கு அரசு மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது.
பிலிப்பைன்ஸ் அதிபர் டோட்ரியோவுடனான சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு குறித்த பேச்சுவார்த்தைகளுடன், வர்த்தக உறவு சார்ந்தும் ராம்நாத் கோவிந்த் ஆலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிலிப்பைன்ஸில் உள்ள இந்திய சமூகத்தினரிடமும் ராம்நாத் கோவிந்த கலந்தாலோசிக்க உள்ளார்.
பிலிப்பைன்ஸ் சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் 21-ம் தேதி ஜப்பான் புறப்படுகிறார் ராம்நாத் கோவிந்த்