

பிரபல கொரிய பாப் பாடகி சூலி தனது இல்லத்தில் மரணமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவருக்கு வயது 25.
கொரிய நாடுகளில் பாப் பாடர்கள் திரைபட நடிகர்களுக்கு மேலாக கொண்டாடப்படுவார்கள். அந்த வகையில் தென் கொரியாவைச் சேர்ந்த பாடகி சூலிக்கு ரசிகர்கள் அதிகம். இந்த நிலையில் பாடகி சூலி இன்று மரணமடைந்ததாக தென் கொரிய போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார் தரப்பில், “சூலி மேலாளர் சியோலின் அருகே உள்ள சூல்லியின் இல்லத்தில் அவரை இறந்த நிலையில் கண்டதாக தெரிவித்தார். சூலியின் மரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. சூல்லி தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
மறைந்த சூலி தென் கொரியாவின் பிரபல பாப் இசை குழுவான F(x) -ல் அங்கம் வகித்தார். பின்னர் நடிப்பின் மீது இருந்த ஆர்வதால் அக்குழுவிலிருந்து 2015 ஆம் ஆண்டு வெளியேறினார்.
சூலி பொது வெளியில் தைரியாமான கருத்துகளை தெரிவித்து வந்தவர். NO Bra விழிப்புணர்வுக்காக பலமுறை ஆதரவு குரல் அளித்திருக்கிறார் சூலி. இதன் காரணமாக சமூக வலைதளங்களில் அவர் கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டார்.
சூலியின் இந்த மரணம் கொரிய ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.