Published : 14 Oct 2019 02:07 PM
Last Updated : 14 Oct 2019 02:07 PM

இமயமலை உயரத்தை அளவிடவுள்ள சீனா, நேபாளம்

இமயமலை உயரத்தை சீனாவும் நேபாளமும் அளவிட இருப்பதாக, கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது தெற்காசியப் பயணத்தின் ஒருபகுதியாக சனிக்கிழமை நேபாளம் சென்றடைந்தார். இதனைத் தொடர்ந்து நேபாளஅதிபர் பிந்தியா தேவியைச் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடந்த நேபாளத் தலைவர்களுடனான சந்திப்பில் சீனா - நேபாளம் இடையே வர்த்தகம், கட்டுமானம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 18 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்நிலையில் இமயமலையின் உயரத்தை சீனாவும் நேபாளமும் அளவிட இருப்பதாக கூட்டாக அறிக்கை வெளியிட்டன.

“நேபாளத்தின் சாகர்மதாவும், சீனாவின் ஜுமுலங்மாவும் இரு நாடுகளின் நட்பின் அடையாளமாக உள்ளன. இரு நாடுகளும் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழலைp பாதுகாத்தல் உள்ளிட்ட பல துறைகளில் எங்களது ஒத்துழைப்பை ஊக்குவிக்க இருக்கிறோம். எனவே சாகர்மதா \ ஜுமுலங்மா ஆகிய மலை சிகரங்களை அளவிட உள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இமயமலையின் உயரம் இந்தியாவால் 1954 ஆம் ஆண்டு அளவிடப்பட்டது. அப்போது அளவிடப்பட்ட உயரம் 8,848 மீட்டர். ஆனால் 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக இமய மலையின் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்ற விவாதம் நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வந்தது. இதனைத் தொட்ரந்து 2017 ஆம் ஆண்டு இமயமலையை அளவிடுவதற்காக புதிய குழுவை நேபாளம் அரசு நியமித்தது. இந்தக் குழு அடுத்த ஆண்டுக்குள் இமயமலையின் உயரத்தைத் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சீனாவும், நேபாளமும் கூட்டாக இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x