மான்செஸ்டரில் கத்தியால் தாக்குதல்: பொதுமக்கள் 5 பேர் காயம்

மான்செஸ்டரில் கத்தியால் தாக்குதல்: பொதுமக்கள் 5 பேர் காயம்
Updated on
1 min read

இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் கத்தியால் நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில், “இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் ஷாப்பிங் மால் ஒன்றில் கையில் பெரிய கத்தியுடன் வந்த நபர் ஒருவர் தாக்குதல் நடத்தினார். இதில் 5 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு லேசான காயமே ஏற்பட்டுள்ளதாகமாகவும், இந்தத் தாக்குதலின் பின்னணி நோக்கம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு இதே மாலுக்கு அருகே மான்செஸ்டர் அரேனாவில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் 22 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in