Published : 12 Oct 2019 03:56 PM
Last Updated : 12 Oct 2019 03:56 PM

துருக்கிக்கு ராணுவ ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தும் நெதர்லாந்து: மற்ற நாடுகளுக்கும் அழைப்பு

ஹேக்,

வடக்கு சிரியாவில் குர்திஷ் படைகள் மீது அங்காரா தாக்குதல் நடத்தியதை அடுத்து துருக்கிக்கு அனைத்து ராணுவ ஆயுத ஏற்றுமதியையும் முடக்க நெதர்லாந்து முடிவு செய்துள்ளதோடு மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து படையினர் மீது துருக்கி மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்காரா பகுதியில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் லட்சக்கணக்கான மக்கள் உணவின்றி தவித்து வருவிதாக ஐநா தெரிவித்துள்ளது. இன்று காலை நடந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.

சிரியாவில் யுத்தம் தொடங்கியதிலிருந்து மூன்றாவது முறையாக துருக்கியின் இதுபோன்ற நடவடிக்கை அமைந்துள்ளதாக சர்வதேச நாடுகளின் கண்டனத்திற்கு துருக்கி ஆளாகியுள்ளது.

ஐரோப்பாவின் மொத்த ஆயுத ஏற்றுமதியில் சுமார் எட்டு சதவீதம் நெதர்லாந்திலிருந்து சப்ளை செய்யப்படுவதாக ஆம்ஸ்டர்டாமை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் பிரச்சார அமைப்பான ஸ்டாப் வாபன்ஹாண்டலின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் முக்கியமாக டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களுக்கான பாகங்கள், தொழில்நுட்பம் மற்றும் போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர்களுக்கான பாகங்கள் ஆகியவை அடங்கும் என்று ஸ்டாப் வாப்பன்ஹண்டெல் 2017 இல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

துருக்கியின் குர்திஷ் படைகளுக்கு எதிரான கொடிய தாக்குதலை எதிர்த்து நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர் ஸ்டெஃப் பிளாக் புதன்கிழமை அங்காரா தூதருக்கு கடிதம் எழுதி திரும்ப அழைத்துக்கொண்டார். துருக்கியின் தாக்குதலை தொடங்கியதால் அமெரிக்கப் படைகள் நாடு திரும்பும்படி ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவிட்டார்.

இதுகுறித்து நெதர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது:

"துருக்கிக்கு ராணுவப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து உரிம விண்ணப்பங்களையும் நிறுத்தி வைக்க நெதர்லாந்து இப்போது முடிவு செய்துள்ளது. நெதர்லாந்து நாடாளுமன்றத்தில் வெளியுறவு வர்த்தக அமைச்சர் சிக்ரிட் காக் அறிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,

வடகிழக்கு சிரியாவில் ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் இல்லாவிட்டால் துருக்கியின் அனைத்து ராணுவ உரிம விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.

ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிரான சர்வதேச கூட்டணியின் ஒரு பகுதியும், துருக்கியுடனான சக நேட்டோ கூட்டாளியுமான நெதர்லாந்து, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், துருக்கிமீது கட்டுப்பாடுகள் விதிக்கவும் ஆயுத ஏற்றுமதிக்கான அளவுகோல்களை நெருக்கமாக பின்பற்றவும் முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம்.

இவ்வாறு நெதர்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உச்சி மாநாட்டில்

வரும் திங்கள் கிழமை, லக்சம்பேர்க்கில் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் துருக்கி ஆதிக்கம் செலுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், அடுத்த வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் உச்சி மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க உள்ளனர்.

ஆனால், துருக்கி மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கு அவர்கள் ஒப்புக்கொள்வதாக இருந்தால், அது இனிவரும் நாட்களில் சிரியாவில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்ததே ஆகும்.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x