Published : 12 Oct 2019 08:08 AM
Last Updated : 12 Oct 2019 08:08 AM

காந்தியின் 150-வது பிறந்தநாள்- நாணயம் வெளியிடுகிறது இங்கிலாந்து

லண்டன்

தெற்கு ஆசியாவில் செல்வாக்கு மிகுந்த இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களுக்கு பாராட்டு விழா அந்நாட்டு அரசின் சார்பில் லண்டனில் நேற்று முன்தினம் நடந்தது. அந்த விழாவில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த நினைவு நாணயம் வெளியிடப்படும் என்று இங்கிலாந்து நிதியமைச்சர் சாஜித் ஜாவித் தெரிவித்தார்.

பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவரான அமைச்சர் சாஜித் ஜாவித் அந்த விழாவில் பேசுகையில், ‘‘மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் கொண்டாடும் இந்த வேளையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இங்கிலாந்து அரசின் சார்பில் காந்தியின் உருவம் பொறித்த நினைவு நாணயம் வெளியிடப்படும். உலகுக்கு காந்தி கற்றுக் கொடுத்தவைகளை நாம் மறந்துவிடக்கூடாது’’ என்றார்.

1888-ம் ஆண்டு லண்டன் சென்ற மகாத்மா காந்தி அங்கு சட்டப்படிப்பை முடித்தார். பின்னர், 1931-ம் ஆண்டு இந்தியாவின் சுதந்திரம் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள காந்தி லண்டன் சென்றதையும் சாஜித் ஜாவித் நினைவு கூர்ந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x