

பெய்ஜிங்
சீனாவில் உய்கர் இனத்தவரின் கல்லறைகளை சூறையாடும் நட வடிக்கையில் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளது. இது, அந்த இன மக்களின் அடையாளங்களை அழிக்கும் முயற்சி என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி யுள்ளனர்.
சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது ஜின்ஜியாங் பிராந்தியம். சீன அரசின் அதிகார வரம்புக்குட்பட்ட தன்னாட்சி பிரதேசமாக இந்த பிராந்தியம் விளங்குகிறது. இங்கு சுமார் 1 கோடிக்கும் அதிகமான உய்கர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் இஸ்லாம் மதத்தை பின்பற்றி வரும் சீன பழங்குடியினத்தவர் ஆவர்.
இதனிடையே, உய்கர் மக்கள் சீன அரசுக்கு எதிராக கிளர்ச்சியி லும், தீவிரவாத நடவடிக்கைகளி லும் ஈடுபடுவதாக கூறி அவர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளையும், அடக்குமுறைகளையும் அந்நாட்டு அரசு விதித்து வருகிறது. இதனால், பல ஆண்டுகளாக உய்கர் இனத்த வருக்கும், சீன அரசு படைகளுக் கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஜின்ஜியாங் பிராந்தியத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சீனா தனது ராணுவப் படைகளை குவித்து மனித உரிமை மீறல் களில் ஈடுபட்டு வருவதாக கூறப் படுகிறது. மேலும், அங்கு ஆயிரக் கணக்கான உய்கர் இனத்தவர் கள் கொன்று குவிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.
மிக சமீபகாலமாகத்தான், இந்த மனித உரிமை மீறல்கள், பிற உலக நாடுகளுக்கு தெரியவந்தன. ஜின்ஜியாங் பிராந்தியத்தில் சீன அரசு இதுபோன்ற அடக்குமுறை களை கைவிட வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும், சீனா அதனை கண்டுகொள்ள வில்லை. அதுமட்டுமின்றி, ஜின்ஜி யாங் பிராந்தியத்துக்கு சர்வதேச பத்திரிகையாளர்கள் செல்லவும் அந்நாடு தடை விதித்திருக்கிறது.
கல்லறைகள் அழிப்பு
இந்நிலையில், ஜின்ஜியாங்கில் உள்ள உய்கர் இனத்தவரின் கல் லறைகளை அழிக்கும் நடவடிக் கையில் சீன அரசு தற்போது தீவிர மாக ஈடுபட்டுள்ளது. கடந்த 4 ஆண்டு களில் மட்டும் 45-க்கும் மேற்பட்ட கல்லறை தோட்டங்களை உரு தெரியாமல் சீன அரசு அழித்துள்ள தாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது, ஜின்ஜியாங் பிராந்தியத் தில் உய்கர் இனத்தவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளத்தை அழிக்கும் நடவடிக்கை என வெளி நாடுகளில் வசிக்கும் அந்த இன மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கல்லறைகள் அழிப்பை தொடர்ந்து, ஒட்டுமொத்த உய்கர் மக்களையும் அழிக்க சீனா தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் எச்சரிக்கை யும் விடுத்திருக்கின்றன. இதனை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என அவை வலியுறுத்தி வருகின்றன.
அமெரிக்க விசா மறுப்பு
இந்நிலையில், உய்கர் இன மக்க ளுக்கு எதிராக மனித உரிமை மீறல் கள் நடைபெறுவதாக கூறி, சீனா வில் உள்ள 28 பெருநிறுவனங் களுக்கு தங்கள் நாட்டுக்கு வரு வதற்கான விசா மறுக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.