Published : 10 Oct 2019 09:53 PM
Last Updated : 10 Oct 2019 09:53 PM

பயங்கரவாதத்தைத் தூண்டிவிடுவதாக முத்தாஹிதா குவாமி இயக்க நிறுவனர் மீது பிரிட்டனில் வழக்கு

லண்டன், பிடிஐ

முத்தாஹிதா குவாமி இயக்கத்தின் நிறுவனர் அல்டாஃப் ஹுசைன் மீது பயங்கரவாதத்தைத் தூண்டி விடுவதாக ஸ்காட்லாந்து யார்டு வழக்குத் தொடர்ந்ததையடுத்து பிரிட்டன் பயங்கரவாதச் சட்டம் 2006-ன் கீழ் விசாரணையை எதிர்கொள்ள இவர் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.

65 வயதான ஹுசைன் 1990களில் இங்கிலாந்தில் புகலிடம் கோரினார், பிறகு இவருக்கு பிரிட்டன் குடியுரிமையும் கிடைத்தது. பாகிஸ்தானின் அரசியல் கட்சிகளுள் ஒன்றான முத்தாஹிதா குவாமி இயக்கத்தின் மீது இவர் தனது பிடியை இறுக்கமாகவே வைத்திருந்தார்.

இவர் ஆகஸ்ட் 22, 2016-ல் தீப்பொறி பறக்கும் ஒரு பேச்சு ஒன்றை வெளியிட்டார். இவரது பேச்சுக்குப் பிறகு கராச்சியில் உள்ள ஊடக அலுவலகம் ஒன்றை இவரது கட்சியினர் சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். இதோடு மட்டுமல்லாமல் பாகிஸ்தானை, “உலகின் புற்று நோய்” என்று இவரது கட்சியினர் வர்ணித்து கோஷமிட்டதும் பரபரப்பானது.

இதனையடுத்துதான் பயங்கரவாதத்தைத் தூண்டுவதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அல்டாஃப் ஹுசைன் வடக்கு லண்டன் மில் ஹில் பகுதியில் வசித்து வருபவர், இவரை லண்டன் போலீஸ் ஜூன் 11ம் தேதி சீரியச் கிரைம்ஸ் சட்டத்தின் கீழ் கைது செய்து பிறகு விடுவித்தது.

முத்தாஹிதா குவாமி இயக்கம் 1984ம் ஆண்டு முஹாஜிர்கள் அல்லது உருது பேசும் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியாகத் தொடங்கப்பட்டது, 1947-ல் இந்தியாவிலிருந்து பிரிந்த போது இந்தியாவிலிருந்து சென்ற முஸ்லிம்களின் சார்பாக இந்த இயக்கம் அல்லது கட்சி தொடங்கப்பட்டது. இந்தக் கட்சி 3 பத்தாண்டுகளுக்கு கராச்சியில் அரசியல் ஆதிக்கம் செய்தது. உருது பேசும் முஹாஜிர் தொழிலாளர் பிரிவிலிருந்து இவர்களுக்கு கடும் ஆதரவு இருந்தது.

அல்டாஃப் ஹுசைனின் பிரிட்டன் மீடியா அலுவலகம் தன்னை எம்.கியு.எம். கட்சியின் செயல்தலைமையகமாகவே கருதிச் செயல்பட்டு பாகிஸ்தானி அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்து வந்தது.

ஆகஸ்ட்டில் ஹுசைன் பேசும்போது பாகிஸ்தானின் குடிமை மற்றும் ராணுவ நிறுவன வடிவங்கள் காஷ்மீர் விவகாரம் குறித்து கடந்த 72 ஆண்டுகளாக வெகுஜன மக்களை தவறாக வழிநடத்தியும் பொய்மையையும் பரப்பி வருகிறது என்று கடும் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x