

நியூசிலாந்தில் வடக்கு தீவுப் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நியூசிலாந்தில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியம் ஆய்வு மையம், “ நியூசிலாந்தில் வியாழக்கிழமை இரவு வடக்கு தீவுப் பகுதியில் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியது. இதன் ஆழம் 10 கிலோ மீட்டர்” என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக கடந்த ஜூன் மாதம் நியூசிலாந்தின் வடகிழக்கில் தொலைதூரம் உள்ள கெர்மடெக் தீவுகள் அருகே அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகவும் பதிவாகியது. இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுகப்பட்டு பிறகு வாபஸ் பெறப்பட்டது.
கெர்மடெக் தீவுகள் ஒரு துணை வெப்பமண்டல தீவு ஆகும். பசிபிக்கின் நெருப்புவளையத்தின் ஒரு பகுதி என்று கூறுகிறார்கள்.
இங்கு கடலுக்குக் கீழே உள்ள பல டெக்டோனிக் பிளேட்களின் குறுக்குவெட்டுப் பகுதிகளில்தான் எரிமலை மற்றும் நிலநடுக்கத்தின் மையம் உள்ளது.