இந்தோனேசியாவில் ராணுவ விமான விபத்தில் 113 பேர் பலி?

இந்தோனேசியாவில் ராணுவ விமான விபத்தில் 113 பேர் பலி?
Updated on
1 min read

இந்தோனேசியாவில் விமானப் படைக்கு சொந்தமான போக்கு வரத்து விமானம் ஒன்று நேற்று விழுந்து நொறுங்கியதில் 113 பேர் உயிரிழந்திருப்பர் என அஞ்சப்படுகிறது. இதுவரை 49 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், மேடன் நகரில் உள்ள விமானப் படை தளத்தில் இருந்து இந்த விமானம் புறப்பட்டது. இதில் 3 விமானிகள் உட்பட 12 ஊழியர்கள் 101 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. பிற விமானப் படை தளங்களுக்கு சப்ளை செய்யவேண்டிய பொருட்களுடன் இந்த விமானம் புறப்பட்டது.

இந்நிலையில் புறப்பட்ட 2 நிமிடத்தில் அருகில் உள்ள குடி யிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. அதில் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் பலத்த சேதம் அடைந்தன. கார்கள் தீப்பற்றி எரிந்தன.

இதையடுத்து மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. கட்டிட இடி பாடுகளில் இருந்து இதுவரை 49 உடல்கள் மீட்கப்பட்டு, மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in